'ஒரு கவிஞனின் கதை' என்ற தலைப்பைப் பார்த்ததும், 'இது என் வாழ்க்கைக்கதையாக இருக்குமோ?' என்ற ஆவல் உங்களுக்குக் கிளம்பி இருக்கும்.
என் வரலாறு இதில் இல்லை; ஆனால் முடிவாக ஒரு ஆதங்கம் இருக்கிறது.
ஒரு கவிஞனை பின்னணியாக வைத்து, 'மணி மண்டபம்' என்றொரு திரைக்கதை எழுதினேன். அதை ஒரு படக்கம்பெனி படமாக எடுத்து. ஐந்து பாடல்களோடு மூவாயிரம் அடி படமாயிற்று. பிறகு பல காரணங்களால் படம் நின்று போயிற்று.
என் மகன் கண்மணி சுப்பு, 'பொன்னி நூலகத்திற்கு நான் ஒரு கதை எழுத வேண்டும்' என்று கேட்டபோது கவிஞனின் கதையையே எழதலாம் என்று எனக்குத் தோன்றியது. பழைய கதைகள் மனதுக்குள்ளேயே ஊறிக் கிடந்ததை இதனை மூன்று நாட்களில் எழுதி முடித்த கதைதான் இது.
Be the first to rate this book.