நிலவொளியுடனும்
பனியுடனும்
நள்ளிரவு
வேறெந்த வார்த்தைகளும் எஞ்சியிருக்கவில்லை...
நான் சிங்கத்திலிருந்து வந்தேன்
நீ வில்லாளியிடமிருந்து வந்தாய்
நாம் இந்த உலகில்
நூற்றாண்டு கால விருந்தாளிகள் மட்டுமே;
நாம் கொஞ்சம் தயங்கி நிற்கலாம்,
புறப்பட்டு செல்வதற்கு முன்…
இந்த உலகம்
ஒரு சிலந்தி வலையின் முன்னால்
அங்கும் இங்கும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!
நான் தனியாக இருக்கும்போது
ஆகாயம் எத்தனை பெரியதாக இருக்கிறது!
Be the first to rate this book.