ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது நாட்டைச் சேர்ந்த லத்தீப் மஹ்மூதை அங்கு சந்திக்க நேர்கிறது. சொந்த நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு இருவரின் வாழ்க்கையிலும் ஊடாடிய சில கொந்தளிப்பான சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நினைவுகளின் பின்னலை மெல்லிய நகைச்சுவை இழையோடுகின்ற தனது செறிவான மொழியால் இந்நாவலில் குர்னா நமக்கு உணரத்தருகிறார். மனித உணர்ச்சிகளின் எல்லா வண்ணங்களையும், மனித உறவுகளின் உருமாற்றங்களையும் நம்முன் விரிக்கிறது இந்தப் படைப்பு.
"அகதிகள் விஷயம் என்று வரும்போது, அவர்களுக்கு எதிரான தீவிர அநீதி நிலவும் ஒரு காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். எழுத்து அதை மாற்றும் என்று நான்
நினைக்கவில்லை. ஆனால் அப்படியேதேனும் நிகழ்ந்தால், அதுவொரு அற்புதம்தான். எனக்குத் தெரிந்ததை, என்னைக் கவர்ந்ததை, அவசியம் பேச வேண்டும் என்று நான் நம்புவதை நான் எழுதுகிறேன். அவை அடையும் இடம்… அது என் கையில் இல்லை.”
Be the first to rate this book.