இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவனை சிநேகிதியாய்ப் புரிந்து கொள்ள முற்பட்டால் வாழ்க்கை சுலபம். கணவனை பொன் கொண்டு வந்து குவிக்கும் புருஷனாக, போகம் தரும் கணவனாக மாத்திரம் தராசல் நிறுத்தாமல் பரம்பரையின் பழைய பெருமை அளக்க அடிக்குச்சியாகப் பயன்படுத்தாமல் தனக்கென்று ஒரு தடம் பதிக்க விரும்பும் மனிதனாக, தோழனாகப் புரிந்து கொள் என்று இந்த நாவல் மன்றாடுகிறது.
Be the first to rate this book.