ஃப்ராய்டியம் என்பது உளவியல் நோக்கில் பிரச்சனைகளை ஆய்வு செய்வது. தனி மனித பிரச்சனைகளுக்கு உளவியலை பயன்படுத்துவதுபோல் சமூகம், வரலாறு என அனைத்துக்கும் ஃப்ராய்டை பயன்படுத்துவது சரிதானா என்ற கேள்வி வலுவாக உள்ளது. இருப்பினும் ஃப்ராய்டிய நோக்கில் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்திருப்பது முக்கியமானது. நம்முடைய பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள் இவைகளை ஃப்ராய்டிய நோக்கில் – அதாவது அனைத்தையும் பாலியல் சார்ந்து பார்த்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு கி. ராஜநாரா யணன் தொகுத்த சிறுகதைகள் மிகவும் பயன்பட்டிருக்கிறது. இந்நூலோடு கருத்து உடன்படாவிட்டாலும், ஒருமுறை வாசிப்பது நாட்டுப்புற மக்களின் உளவியலை புரிந்துகொள்ள நிச்சயம் பேருதவியாக இருக்கும். அதேசமயம், எல்லாவற்றையும் பாலியல் சார்ந்தே நோக்குவது சிந்தனைக் குழப்பம் ஆகிவிடாதோ!
- தீக்கதிர்
Be the first to rate this book.