குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வழக்கம் மறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், அயல்நாட்டில், தொழில்சார்ந்த சூழ்நிலையில் வாழும் ஆசிரியை இந்த வழக்கத்தை விட்டுவிடாது. தமிழறிந்த குழந்தைகளைக் கூட்டிவைத்துப் பழைமைச் சூழலை மறந்துவிடாதிருக்க, அவர்களிடையே தமிழில் பாடவும் கதை கூறவும் செய்து - செய்வித்து - அருந்தொண்டாற்றி வருவது ஒப்புயர்வற்ற தமிழிப்பணியாகும். அந்தக் குழந்தைகள் சுவைத்து மகிழ்ந்த அதே கதைகள்தாம் இப்பொழுது உங்களை மகிழ்விக்க நூல் வடிவில் வருகின்றன.
Be the first to rate this book.