உலக நாடுகள் அனைத்தும் சுதந்தரம் பெற்று, ஐக்கியமாய் உலக சமாதானத்துக்குப் பாடுபட்டால் தான், உலகத்துக்கு விமோசனம் ஏற்படும் என்பது வில்கீ கண்ட உண்மை. 'இந்த வேலையை யுத்த காலத்திலேயே தொடங்க வேண்டும்; யுத்தத்துக்குப் பின்னே ஒத்திப் போடலாகாது' என்பது அவருடைய திட அபிப்பிராயம். இதைப் பல விதத்தில், பிரத்யட்சப் பிரமாண - அநுமானங்களோடு இந்தப் புத்தகத்தில், அவர் வற்புறுத்தினார். 'ருசிகரமான பிரயாண நூல், வர்ணனை இலக்கியம், ராஜீய தத்துவம் இந்த மூன்றின் அம்சங்களும் இதிலே பொருந்தியிருக்கின்றன' என்று எல்லாரும் புகழ்ந்தது இந்த நூல். இது பல நாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல், உலகத்தின் ஒருமையை நிருபிக்கும் நூல்ந உன்னத ராஜீய சித்தாந்தத்தை வைக்கும் நூல்.
Be the first to rate this book.