கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும், முரண்பட்டும், சேர்ந்தும், விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும், வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தபூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட்டுகின்றன. வரும் காலத்தில் தன்னை ஒரு முக்கியமான கதைசொல்லியாகத் தமிழில் நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஓட்டத்தில் முதல் சுற்றை முடித்துத் தொடர்கிறார் கார்த்திக் புகழேந்தி
- எழுத்தாளர். ஆத்மார்த்தி
Be the first to rate this book.