”டிசம்பர் 26, 2004-இல் நடந்தது சுனாமி தாக்குதல் அல்ல. நடுக்கடலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நடத்திய அணு ஆயுதத் தாக்குதல். இந்தியா அதை மறைக்கிறது.”
- இப்படி ஒரு கருத்தைக் கொண்டு லண்டனில் ஓர் இந்திய எழுத்தாளர் புத்தகம் வெளியிட இருக்கிறார். இருபது வருடங்கள் கழித்து இது வெளியே தெரிந்தால் இந்தியாவுக்கு அவமானம். அந்தக் கருத்து உண்மையா? பொய்யா? என்று விவாதிப்பதைவிட, இதைப் பற்றி யாரும் பேசக் கூடாதென்று இந்திய அரசாங்கம் நினைக்கிறது. அதற்காக சி.பி.ஐ, ரா உளவுத்துறை, இராணுவ உளவுத்துறை என மூன்று துறையின் முக்கிய அதிகாரிகளும் கலந்தாலோசிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதை ரா உளவாளி ஒருவன் கண்டுபிடிக்கிறான். அந்தத் தாக்குதல் நடந்தால் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள். அந்தத் தீவிரவாத தாக்குதலை ரா உளவாளி தடுக்க நினைக்கிறான்.
லண்டனில் நடக்கும் நூல் வெளியீட்டுக்கும், இந்தப் புத்தகத்திற்கும், தீவிரவாதத் தாக்குதலுக்கும் என்ன சம்மந்தம்? அந்தப் புத்தகம் வெளியானதா? ரா உளவாளி தாக்குதலைத் தடுத்து நிறுத்தினாரா? என விறுவிறுப்பாக இந்த நாவல் செல்கிறது.
Be the first to rate this book.