மொழி என்பது நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், கலச்சார எழுச்சி, உணர்ச்சிகள், கருத்துகள் என்பவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் கருவியாகவும் இருக்கின்றது. எனவே ஓர் இனத்தின் புற அடையாளமாக திகழ்கின்றது. உலகில் இருக்கும் மொழிகளின் எண்ணிக்கை மொத்தம் 6809. இவற்றுள் 700க்கும் மேற்பட்ட மொழிகளில் மட்டும்தான் பேசவும் எழுதவும் முடியும். இம்மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்பவை எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம், தமிழ், சீனம் என்னும் ஆறு மொழிகளாகும். இம்மொழிகளுக்கிடையெ ஒப்பீடு செய்யும்போது அம்மொழிகளின் பொதுத்தன்மைகளை வெளிக்கொணர முடியும். மேலும் தமிழ்மொழியின் தனித்தன்மையையும் நம்மால் உலகிற்கு உணர்த்த முடியும்.
Be the first to rate this book.