மொழி, நாடு, பெண்ணுரிமை, ஆன்மீகம், தத்துவம், கல்வி இவை அனைத்தையும் பற்றித் தெளிவாக சிந்தித்து ஒரு தீர்க்கதரிசியைப் போல கவிதை பாடியவர் பாரதியார். அவரை ஆங்கிலக் கவிஞர்களோடு ஒப்புமை செய்வது ஒரு ஆனந்தமான இலக்கியத்தேடல். நம் தமிழ் மொழியின் பெருமையை, நாட்டின் வளத்தை அவர் எடுத்துக் கூறியுள்ளது போல் வேறெந்தக் கவிஞரும் எடுத்துக் கூறவில்லை. பாரதி ஒரு தங்கச்சுரங்கம். அகழ்வாராய்ச்சி செய்பவனைப்போல் அவன் படைப்புகளுக்குள் ஆழ்ந்து தேடினால் தொடர்ந்து ஒப்பற்ற பொக்கிஷம் நமக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அந்த வகையில் இந்நூல் முக்கியமானது.
Be the first to rate this book.