தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி மலைப்பை ஏற்படுத்தும். அதையும் மீறி வேறு ஒன்று இருக்க முடியாது எனத் தோன்றும். அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும்போது ‘ஓ இப்படியும் இருக்குமா?’ என்று இன்னும் அதிக அளவிலான வியப்பு வந்து தாக்கும். இப்படியாக நாவலின் எல்லைவரை வாசகர்களுக்கு முடிவில்லாத ஆச்சரியங்கள் எழுந்தவண்ணமே இருக்கும்.
Be the first to rate this book.