சாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.
இந்த கெடுபிடிகளுக்கேல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம் தான் ஓப்பன் சோர்ஸ். ஆபரேட்டிங் சிஸ்டம், ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையே வராது என்பது கூடுதல் சிறப்பு.
ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது.
Be the first to rate this book.