சில ஜப்பானிய விமானங்கள் நம் சென்னைத் துறைமுகத்தில் குண்டுகள் வீசிப்பறந்து சென்றது ஒரு நிகழ்ச்சி. அன்றைய அரசாங்க மொழியில் ‘மிகச்சொல்ப சேதங்களே’ ஏற்பட்டன என்பதுதான். ஆனால் அந்தச் சேதங்கள் சிலரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகள்…? ஒரு சரித்திரச் சம்பவத்துக்கும் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது ஒரு சாட்சி இருக்கத்தான் செய்கிறது. சாட்சி என்பது நம்மைப்போல ஒரு மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லையே. அந்தச் சாட்சி காலங்காலமாக வானில் ஒளிரும் சந்திரனாகவோ நட்சத்திரப்பட்டாளமாகவோ அல்லது ஏன் பட்டப்பகல் சூரியனாகவோ கூட இருக்கலாம். ஆனால் இங்கே நாம் பார்க்கப்போவது ஒரு சரக்குக் கப்பல். ஸ்டீம் ஷிப் குறிஞ்சி என்னும் அந்தக் கப்பல் ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி நாற்பத்தி மூன்றில் சலனமின்றிப் பார்த்த சம்பவத்தின் தொடர்ச்சியை மீண்டும் 26 வருடங்களுக்குப்பிறகும் பார்க்க நேரும் கதைதான் இந்த ‘ஊழிற்பெருவலி’.
சரித்திரமே கதையாக இருக்கும் போது கதை என்று எழுதுவது எதை?
Be the first to rate this book.