ஓய்வு வாழ்வு தற்போது நம்மில் பலருக்கு ஒரு பிரச்சினையாகத் தோன்றுகிறது. ஆயுட்காலம் அதிகரித்திருப்பதே அதற்கு முக்கிய காரணம். சராசரி மனிதன் எழுபத்தைந்து வயதுவரை உயிர் வாழ்கிறான். எழுபது வயது வரை சுறுசுறுப்பாக இருக்கிறான். அரசுப்பணி அரசு சார்ந்த பணி மற்றும் பெயர் பெற்ற தனியார் சிறுவனப்பணிகளில் 58-60 வயதிற்குள் பணி ஓய்வுபெற்று விடுகிறான். வேலையல்லாத மூளை சாத்தானின் பட்டறை' என்றொரு பழமொழி உண்டு. எனவே அதற்கேற்ப அவன் செயல்பட்டு தனக்கும் பிறர்க்கும் பிரச்சினையாகி விடுகிறான். இப்படிப்பட்ட பிரச்சினை எழாமல் எவ்வாறு தவிப்பது அதுதான் இந்நூலின் நோக்கம்.
Be the first to rate this book.