ஊசி என்றால், வெண்பாவுக்குப் பயம். உங்களுக்கும் தானே? வெண்பாவை ஊசி விரட்டுகிறது. எப்படித் தப்பித்தாள்? ஊசி ஏன் அழுதது? தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகம் வாசியுங்கள்.
வாசிப்பு இயக்கம் – தீராத நம் கனவுகளில் ஒன்று. எளிய வீட்டுக் குழந்தைகளையும், அரைகுறையாகப் படித்த அவர்களின் பெற்றோரையும்- குறிப்பாகப் பெண்களையும் – புத்தகங்களோடு இணைப்பது, வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை நோக்கம். எளிய மொழி, சிறு சிறு வாக்கியங்கள், படங்கள்- ஆகியவை, வாசிப்பு இயக்கச் சிறு புத்தகங்களின் வேர்கள்.
வாசிப்பு இயக்கத்தைப் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்கிறது. பாரதி புத்தகாலயம் அதனோடு கைகோர்க்கிறது. இவை இரண்டும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 5 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.
Be the first to rate this book.