ஜெயந்தி சங்கர் சிறுகதைகளின் களம் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. தனித்துவமானது. மனிதர்களின் அகம் சார்ந்த உரையாடல்களை அடிநாதமாகக் கொண்டது. ஆங்காங்கே தெறிக்கும் மெல்லிய கூர்மையான நகைச்சுவையை வெளிப்படுத்தக் கூடியது. இத்தனையும் ஒருசேர ஒரு சிறுகதையில் வெளிப்படும்போது அது தன்னிகரற்ற அனுபவமாக மாறுகிறது.
ஆங்கிலேய காலனிகளாக இருந்த கிழக்காசிய நாடுகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வைப் பேசும் கதைகள், பெண்ணியக் கதைகள், மாறிவரும் பாலின விழுமியங்களைப் பேசும் கதைகள் என இந்தத் தொகுப்பு வாசகர்களை நிச்சயம் வசீகரிக்கும். நாம் இதுவரை பார்த்திராத உலகுக்கும், பார்த்தும் உணர மறுத்த உலகுக்கும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.
ஜெயந்தி சங்கர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Dangling Gandhi’ என்ற ஆங்கிலச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு ‘ஊசலாடும் காந்தி’ என்னும் இந்த நூல்.
Be the first to rate this book.