இயல், இசை, நாடகம் என மூன்று பகுதிகள் தமிழிலே உண்டு என்று பண்டிதர்கள் சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழிலே கவிதையைத் தவிர வேறு எதுவும் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கூத்து இருந்திருக்கிறது, பள்ளு இருந்திருக்கிறது, குறவஞ்சி இருந்திருக்கிறது, இவை எல்லாம் நாம் இலக்கியத்திலே சிறு பகுதிகள் என்று கூறலாம். நாம் இப்போது படித்து அனுபவிக்கும்படியாக நாடகம் ஒன்றுமே இல்லை.
நண்பர் ந. சிதம்பரசுப்பிரமண்யன் 12 நாடகங்கள் எழுதியிருக்கிறார். இதுவே ஓர் ஆச்சரியமான காரியம் என்றுதான் சொல்லவேண்டும். மனித உள்ளத்தின் அந்தரங்க பாவங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்வதற்கு சிறுகதை எவ்வளவு சக்தி வாய்ந்ததோ அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கமுடியும் சிறு நாடகங்களும் என்பதை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். அறிந்து அனுபவித்துப் பார்க்கவேண்டியது தமிழன் கடமை.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.