மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவடைகள் அபாரமானது. புகழேந்தியிடம் கதைத்துக் கொண்டிருந்தால் ஆச்சியோ அப்புவோ நினைவுக்கு வந்து விடுவார்கள். அது அவருக்கு வாழ்வளித்த கொடை. அப்படிப்பட்ட ஒரு கரிசல் மொழிப் புலத்தை கொண்டு குட்டி வீடாக தன் வாழ்வின் துளியை சொட்டியிருக்கிறார். கார்த்திக் புகழேந்தியோடு ஊருக்குச் செல்லும் வழியில் நான் இணைகிறேன்.
- எழுத்தாளர் அகரமுதல்வன்
Be the first to rate this book.