ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.
Be the first to rate this book.