சூல்கொண்ட வௌவாலின் திரவம் வானில் கருமேகமாய் சூழ்ந்துள்ளது. சிறுபெண்கள் அப்பாவின் தொப்புளில் தலைசாய்த்தபடி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டினுள் புதிய கயிற்றுக்கு மஞ்சள் தடவியபின் சிறு விளக்கொளி முன்பு கண்மூடி அமர்ந்திருக்கும் பெண்ணின் கண்ணீர் எக்கடலைப் போய்ச் சேரும்? பூமியினைச் சூழ்ந்திருக்கும் உப்பு நீர் முழுவதும் அம்மாவின் கண்ணீர் தானே? அதிகாரத்தால் ஒடுக்கப்படும் மனங்கள் தங்களின் ஊனொலியை கண்களின் வழியே எழுப்புகின்றன. நோய்மையில் வீழ்ந்திருக்கும் இச்சமூகத்தின் பிள்ளைகள் இரவை விட்டு வெளியேற முடியாத கூகையைப் போல் அமர்ந்திருக்கிறார்கள். பூட்டப்பட்ட நகரத்தின் சாலைகளில் பசியில் அமர்ந்திருக்கும் கண்கள் தீப்பிழம்புகளாக மாறுகின்றன. கவிதையின் சுவை என்னவென்று கேட்டால் நாம் கண்ணீரின் சுவை என்போம்.
Be the first to rate this book.