ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது.
அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைபட வழங்கப்பட்டுள்ளது.
பாலைவன வெண்மணலில் நம் பாதங்களை பதிப்போமா, குழந்தைகளா?!
ஆசிரியர்
அ.ர. ஹபீப் இப்றாஹீம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்றூரான காயல்பட்டினத்தில் பிறந்தவர். கலை, இலக்கியம், பண்பாடு,மாற்றுக் கல்வி ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், கட்டுரையாளராகவும் செய்தியாளராகவும் விளங்குகிறார். கூடவே, சிறார்களுக்கான பல்வேறு பயிற்சி முகாம்களை ஒருங்கிணைக்கிறார்.
Be the first to rate this book.