“கதை மாந்தர்களின் உடல் எல்லைகள் அழிவதே இங்கே கதைகளாகியிருக்கின்றன. பெண் - ஆண் பாலியல் உடல் சிதைவுகள் நிகழ்ந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில் மனித உடல்களின் மீதான பண்பாட்டு அடையாளங்களும் சமூகக் கிழிசல்களும் பாலியல் கருணையால் தையலிடப்பட்டிருக்கின்றன. பாலியல் சகதியில் மிதிபட்ட சில கதை மாந்தர்களும், பண்பாட்டுக் கிழிசல்களை ஒட்டுப்போட இயலா சில மனிதர்களும் இந்தக் கதைகளில் உலாவுகின்றனர். ஊன் வளர்த்து உயிர் வளர்த்தலே அறம் போற்றக் கிடைத்த வாய்ப்பாகவும் இம்மாந்தர்கள் மீண்டெழும்பி வருகின்றனர். வாசித்துச் சொல்லுங்கள்.”
Be the first to rate this book.