சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அவை பலவிதமான சமூக முரண்களை களைந்து, உணர்வுகளின் பரிபூரண சுதந்திரத்திற்கு பூடகமாய் ஒத்தடமிடுகின்றன. உள்ளுரை தனலாக தட்டி எழுப்புகின்றன. அப்படியான சிலிர்ப்பை இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற கதைகள் வஞ்சனை இல்லாமல் அள்ளித் தருகின்றன.
Be the first to rate this book.