ஊடகர் கலைஞர் என்று ஒரு தலைப்பில் பேசும்போது, ‘முரசொலி’ வழியாக நேரடியாகவே கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வரலாற்றை நாம் தொட வேண்டியிருக்கிறது. கூடவே, அவருடைய ஊடகப் பணியைப் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் இதழியலின் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் கொஞ்சம்போலவேனும் தொட வேண்டும் என்றால், அதற்கு மேலும் பயணிக்க வேண்டியிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் நூற்றாண்டுக்கு மேலாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய வரலாறு இது.
Be the first to rate this book.