ஒண்ணாப்பு அலப்பறைகள் அனுபவங்களில் குழந்தைகளின் மனதை அப்படியே நம் கண்முன்னால் காட்டுகிறார் ராஜிலா ரிஜ்வான். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் குழந்தைகளின் உளவியலைப் பேசுகிறது. கற்றலைப் பேசுகிறது. கற்பித்தலைப் பேசுகிறது.
குழந்தைமையின் வெகுளித்தனத்தைப் பேசுகிறது. குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறது. குழந்தைகளுக்கு சிறிய அங்கீகாரமும் பாராட்டும்கூட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று பேசுகிறது. குழந்தைகளின் உளவியல் குறித்த நூறு தத்துவ நூல்களின் பணியைக் கவிஞர் ராஜிலா ரிஜ்வானின் ‘ஒண்ணாப்பு அலப்பறைகள்’ என்ற ஒரே நூல் செய்து விடுகிறது. – உதயசங்கர்
Be the first to rate this book.