நாம் ஏன் ரியோகான் கவிதைகளை வாசிக்க வேண்டும்? அவரும் அவரது கவிதைகளும் வேறு வேறல்ல. கவிதைகளை வாசிக்கையில் ரியோகானுடன் நாம் விளையாடலாம், மலையேறலாம், பைன் மரத்தில் காற்று சலசலப்பதைக் கேட்கலாம், அரிசி வைன் அருந்தலாம் போலவெல்லாம் உணர்கிறோம். ரியோகான் போல முடியாதெனினும் கொஞ்சமாகவேனும், ஒரு சில சமயங்களிலேனும் அவரது சாயல் நமது கவிகளிடம் படியலாம் என்று விரும்புகிறேன். முக்கியமாக அந்த எளிமை, குழைந்தமை, விளையாட்டு, விடுதலையுணர்வு, சற்றும் கறைபடியாத சமரசமற்ற வாழ்க்கை, நேர்மையான கொண்டாட்டம், அதாவது வெறுமையின், ஒன்றுமின்மையின் குதூகலம்.
Be the first to rate this book.