பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவதுபோல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி.
ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவதுபோல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.
Be the first to rate this book.