பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்டு இறுகிய வில் மெதுவாக நெகிழ்ந்து கொடுப்பதுபோல, கதை மெல்ல நெகிழ்ந்து விரிந்துகொண்டே போகும். மேலும் ஒருவித மாயத்தன்மை அல்லது அசாதாரணம் கொண்ட கதைக்களங்கள் மற்றும் கதைக்குள் கதையை - ரம்மியில் ஜோக்கர் போல - மாற்றி மாற்றி செருகிவைத்திருப்பதால், நேர்கோட்டில் கதை நகராதது மட்டுமின்றி, வாசித்தபின் பிறருக்கு சொல்வதும் எளிதல்ல. ஒரு இசைக்கோர்வையைப்போல நம்மளவில் அதை அனுபவிப்பது ஒன்றே சாத்தியம். அதுவே சரியானதும்கூட.
- ரமேஷ் கல்யாண்
Be the first to rate this book.