பல கதைகளால் கோர்க்கப்பட்ட ஒரு நாவல் இது. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று தேடும் ஒருவர், ஸூஃபி மகான் ஒருவரின் சகவாசத்தில் ஆழ்ந்த உறக்கநிலையில் மனத்தின் கீழ் அடுக்குகளுக்குள் பயணிக்கிறார். அங்கு கற்பனையில் திறக்கும் காட்சிகளால் எவ்வாறு அவர் வாழ்வின் அர்த்தபாவங்களை அடைகிறார் என்பதே நாவலின் கரு.
கனவுகளாகக் கற்பனையின் ஆழங்களில், வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் அவர் உலவுகிறார். அவ்வகையில் மனித வரலாற்றின் மறுவாசிப்பு ஒன்று இதன் வழி நிகழ்கிறது. இந்தக் கதையில்தான் எத்தனை விதமான மனிதர்கள்! இதில் பைத்தாகோரஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோர்கூட வருகின்றனர். புத்தர் காலத்து இந்தியாவும் இலங்கையும் சீனாவும் வருகின்றன. இதிலுள்ள ஒரு கதை பூமியைவிட்டுப் பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் எங்கோ நிகழ்கிறது. இந்தப் பன்மியம்தான் இதன் கதையுலகை சுவாரஸ்யமாக்குகிறது.
சத்தியக் கவலையில் லயமான பிரக்ஞைகளுக்கும், நித்தியம் பற்றிய உரையாடல்களில் கிளர்ச்சியுறும் ஆன்மாக்களுக்கும் இந்நூலின் வாசிப்பில் அலாதியான ஓர் இன்பம் காத்திருக்கிறது.
Be the first to rate this book.