நூலாசிரியர் தனிப்பாடல்களின் கலையின்பத்திலே மிக நன்றாகத் திளைத்தவர். "தமிழிலே உள்ள தனிப் பாடல்களைப் படித்து அனுபவிக்க ஒரு ஆயுள் காணாது நமக்கு" என்று தம்முடைய ஆசையைப் புலப்படுத்தி நம் உள்ளத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். கவிஞருடைய அம்பறாத் தூணியில் மிகச்சிறந்த அம்பாகப் பயன்படுவது உவமையே என்பதை ஒரு கட்டுரை மெய்ப்பிக்கிறது. வசன கவிதை முதலான புதிய போக்குகளை ஆராய்வது "காலமும் கோலமும்" என்னும் கட்டுரை.
வில்லுப்பாட்டின் பிறப்பும் வளர்ப்பும் இன்றைய நிலையும் அனுபவத்தை ஒட்டி ஆராய்ந்து கூறப்படுகின்றன, மற்றொரு கட்டுரையில், "அந்தியும் அறிவும்" என்பது இலக்கியத்தில் தோய்ந்த உள்ளத்துடன் எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி பொதிந்தது.
- மு. வரதராசன்
Be the first to rate this book.