அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் தொலைத்தவ. அதனால் அந்த மாபெரும் நீரின் ஓட்டம், அதன் மீது மனிதன் செய்த கொடுமைகளை மட்டுமே அவனுக்கு நினைப்படுத்தியது. தேம்ஸ் நதியின் அழகியலை விட எதார்த்த வாழ்வின் அவலங்களே அவன் மனதை நிறைத்தன.
Be the first to rate this book.