கார் திருடன், உதவி இயக்குநர், பகல் குடிகாரன், ஏமாற்றுக்காரன், கன்னியாஸ்திரீ, பாலியல் தொழிலாளி, மண உறவுக்கு வெளியில் அமைந்த காதலன் ஆகியோரைக் கொண்டது மதுபாலின் கதையுலகம். இவ்வுலகின் நம்பகத்தன்மையும் கேலியும் விசாரணையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் உற்று நோக்கச் செய்கின்றன. வித்தியாசமான குணாம்சங்களைக் கொண்ட மனிதர்களும் பின்புலமும் கொண்ட கதைகள் இவை. ரயில் பயணங்களும் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களும் தங்கும் விடுதிகளும் இக் கதைகளின் நிகழ்களங்கள். யதார்த்த உலகின் மயக்க நிலைகளைக் கொண்டிருப்பது மதுபால் கதைகள்மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாகிறது. கதையின் முடிவுகள் புதிய திறப்புகளைக் கொண்டிருப்பது இக்கதைகளின் சிறப்பு. ‘சிறகுகள் இல்லாமல் தேவதைகள் பறப்பதுண்டு’, ‘ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி?’ ஆகிய கதைகள் தமிழ்க் கதையுலகிற்கு முற்றிலும் புதிய வரவுகள்.
Be the first to rate this book.