நதி, கடலில் சங்கமமாகி விடுகிறது ஆனால், அது, தான் புறப்பட்ட இடத்திலிருந்து சங்கமம் வரையான அதனுடைய பயணத்தில்தான் எத்தனையோ ஓசைகளை எழுப்புகிறது. அருவியோசைகளாகவும் - பாறையோசைகளாகவும் தெளிந்த நீரோட்ட ஓசைகளாகவும் - இப்படித் தனது பயணத்தின் பாதைகளுக்கு ஏற்றபடியெல்லாம் ஓசை எழுப்புகிறது. இது தான் மனித வாழ்க்கையிலும் நிகழ்கிறது. மனிதனும் தனது சூழ்நிலைமைக்குட்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கின்றான். அந்தப் பிரச்சினைகளைத்தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலசி ஆராய்கிறார்.
மனிதனின் முடிவுகள் எல்லாமே வெற்றியில்தான் முடியவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலைகளின் அம்புகள் நல்லதுக்கும் - கெட்டதுக்குமே குறி பார்க்கின்றன. காலத்தின் திசைக்கேற்ப நடந்துகொண்டிருக்கும் மனிதர்க்கெல்லாம் இந்நூல் ஒரு பரீட்சையாக அமையும். தவிடுபொடியாகும் வாழ்வின் நெருக்கடிகளுக்குள் வீழ்ந்துகிடக்கும் ஏழையைக்கூட தட்டியெழுப்பும் சக்தி எழுத்திற்கும் உண்டு என்பதை இந்நூல் நிரூபித்துக் காட்டுகிறது.
Be the first to rate this book.