வாழ்வின் சூழல்களுக்கு தாக்குப்பிடித்து அதன்போக்கில் அலைவுறும் வெவ்வேறு வகையான பெண்களை அதன் யதார்த்தங்களோடு பதிவு செய்துள்ளார் சுப்ரபாரதிமணியன்.
நாகலாந்து மலைகிராமம்,செகந்திராபாத் நகரம்,திருப்பூர் ஆலைக் கூடங்கள் என மூன்று விதமான வாழ்க்கைப்பாடுகளை அதனதன் உயிர்ப்போடு சொல்லிச்செல்கிறது இந்நாவல். இச்சமூகத்தில் எல்லா காலத்திலும் பெண்வாழ்வில் முடிவுற்றுத் தொடரும் தவிப்பும் தாகமும் இயலாமையும் காத்திருத்தலும் தற்கொலை உணர்வும் எனப்பல விதமான மன உணர்வுகளை அச்சு அசலாகப் பதிவு செய்துள்ள இந்நாவலில் பெண்ணெனும் நதியின் விசித்திரமான பயணப் போக்கை அறிந்து கொள்ளலாம்.
Be the first to rate this book.