இந்த நாவல், ஆங்கிலத்திலும் கண்டிப்பாக மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்த நாவல் மாணவர் குழாத்தைச் சென்றடைய வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த நாவலைப் பாட நூலாக வைக்கலாம். ஒழுக்கநெறி கல்விக்கு மட்டுமல்ல, கலை இலக்கிய நயத்தோடு கற்றுக்கொடுப்பதற்கான ஒரு நூலாகவும், ஒரு நல்ல நாவலாகவும், புதினமாகவும் வைக்கலாம்.
இந்த நாவல் ஒருபுறம் நல்ல கலை அனுபவத்தை தந்தாலும், அழகுணர்வு அனுபவத்தைத் தந்தாலும், இன்னொரு புறம் வாழ்வின் மிகச்சிறந்த அறக்கருத்துக்களை தேவையான அறக்கருத்துகளை மாணவர்களை நல்வழியில் இட்டுச் செல்வதற்காக நாவலில் பின்னிப்பிணைந்து பிரிக்க முடியாத பகுதியாக காட்டப்பட்டுள்ளது, நாவல் என்ற இலக்கிய வடிவின் வலுவைக் காட்டுகிறது, கூட்டுகிறது. அருமை
முனைவர் E ஜேம்ஸ் R டேனியல்
Be the first to rate this book.