கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவைத்திருக்கிறார் விட்டல்ராவ். கனவுபோல மறைந்துவிட்ட அந்தக் காலத்துக்கு தம் சொற்கள் வழியாக உயிர்கொடுத்திருக்கிறார்.
அவர் குறிப்பிடும் ஏரி, சத்திரம், கடைகள் எதுவுமே இப்போது இல்லை. எல்லாமே உருமாறிவிட்டன. ஆனால் அவையெல்லாம் இங்கிருந்தன என்பதற்கு விட்டல்ராவின் குறிப்புகள் ஒரு வரலாற்றுச்சாட்சியாக நிற்கின்றன.
Be the first to rate this book.