எனது கவிதை என்பது எனது அம்பு. இலக்கில்லாமல் எய்யப்படும் அம்பு. கால அவசியம் அற்ற அம்பு. தேவை எதுவும் அற்று எய்யப்பட்ட அம்பு. அதை தைக்கிறவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதே இயல்பும், நியாயமும், மற்றபடி கவிதை என்பதை எனது கலை என்று தீர்மானிக விரும்பாத, ஒரு விலகலுடன் அவற்றைத் தடர்வதே எனக்குய் சரியாய் இருக்கிறது.
உண்மையில், என்னுடைய கவிதைகள் குறித்து நான் பேசக்கூட ஏதாவது விஷயம் இருக்கிறதா என்பது சந்தேகமே. அவை நிகழ்கிற ஞானத் தருணங்களைப் பதிவு செய்வது மட்டுமே அவற்றுடனான எனது பயணம்
பல்வேறு காலக்கட்டங்களில் நான் எழுதிய கவிதை பெருந்தொகையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது.
- குமரகுருபரன்
Be the first to rate this book.