தற்காலத்தில் நுழைவுத் தேர்வுகளே மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. ஆனால் அத்தகைய நுழைவுத் தேர்வுகளைப் பற்றியோ அதற்குத் தேவையான முன்முயற்சிகளைப் பெரும்பாலான மாணவர்களும் பெற்றோர்களும், ஏன், ஆசிரியர்களும்கூட அறிவதில்லை. இவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நடத்தப்படும் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. JEE, NEET, BITSAT, NATA, CUET, ISI போன்ற பல முக்கியத் தேர்வுகள், பொறியியல், ஹோட்டல் மேலாண்மை, பட்டயக் கணக்காளர் போன்ற படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள், அவற்றின் தேர்வு வடிவம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான காலம், தேவையான தகுதிகள், மதிப்பெண் கணக்கீட்டு முறை, பாடத் திட்டம், தேர்வுக்குத் தயாராகும் விதம் என அனைத்தையும் விளக்கும் முழுமையான கையேடு இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.