பணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா..? அது தரமான பொருள்தானா..? என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும். ஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது. அப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக விலை வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம்! அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா? அதற்கு என்ன தீர்வு?
Be the first to rate this book.