ஒரு விதத்தில் பார்க்கப் போனால் நாம் இப்போது கலையாகவும், சிருஷ்டியாகவும், சரித்திரமாகவும், கவிதையாகவும், கதையாகவும், நாடகமாகவும், எழுதப் பட்டுவிட்ட மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருஷத்திற்கு பின்பு எழுத ஆரம்பித்து இருப்பவர்கள். நாம் இன்று சொல்லக்கூடிய எதுவும் அப்படி ஒன்றும் புதுமையாகவோ முற்றும் ஒரிஜினலாகவோ சொந்தக் கற்பனையாகவோ இருந்துவிட முடியாது என்பது நமக்கும் தெரிகிறது. இருந்தும் புதுமை, சொந்தம் என்று சில விஷயங்களை வைத்து அனுமானித்துப் பாராட்ட முற்படுகிறோம். நாவல் என்கிற வார்த்தையின் அர்த்தமே, புதுமை, புதுசாகச் செய்யப்பட்டது என்பதுதான். புதுப் பூச்சு செய்யப்பட்டது. புது உருவம் பெற்றது என்ற அர்த்தத்தினால் ஆங்கிலத்திலும், மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் உபயோகிக்கிறார்கள். தமிழில் நவீனம், புதினம் என்று சொல்வதுகூட இந்த புதுமை அடிப்படையை மனதில் கொண்டுதான். கவிதை, நாவல், சிறுகதை, எத்துறையானாலும், இலக்கியத்தரம் ஏற்படுவது என்பது ஒரு புதுமையடிப்படையாலும், ஒரு ஒரிஜினாலிட்டி அடிப்டையாலும்தான்
-க.நா.சுப்ரமண்யம்
Be the first to rate this book.