இத்தொகுப்பின் தலைப்பில் உள்ளே ஒரு கவிதையுமில்லை. பழனிக்குப் போயிருந்தபோது நாயக்கர் காலக் கட்டட அமைவில் பெரியநாயகியம்மன் கோயிலிருப்பது தெரியவர முதலில் அங்கு சென்றிருந்தோம். பிரதான நுழைவு மண்டபத்திலமைந்த தூண் சிற்பங்கள், நுழைவு முகப்பு, உள்ளே மயிலின் சிற்பங்கள் மற்றும் கோயிலின் அமைப்பியலில் வியக்கும் கணங்களோடு இடமிருந்து வலம் சுற்றிவரும் நடைப்பரப்பில் இடப்பக்கமாக பெரிய மதிலுக்கு வெளியே மரமொன்றில் நூற்றுக்கணக்கான பறவைகளின் கலகல ஒலிகள். சரியாக இரவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மரம் என்னதென்றும் பறவைகள் எவையென்றும் அடையாளம் காண முடியவில்லை. என்றாலும் அப்போது எனக்குள் கேட்டது, 'நூற்றிமுப்பத்தியோரு பறவைகள்'.
- க.சி.அம்பிகாவர்ஷினி
Be the first to rate this book.