ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.
இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள்.
- ஜெயமோகன்
5 100 nilangalin
Padma Shanthi R 18-09-2021 08:23 pm