ஈழவரலாற்றை, குறிப்பாக முள்ளிவாய்க்களில் நடந்தேறிய இனப்படுகொலையை பேசுபொருளாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 2006-ல் முறிவடைந்தது. நான்காம் கட்ட ஈழப்போருக்கு வழிவகுத்த காரணிகள், சூழல் பற்றி வெளியான படைப்புகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு அல்லது இல்லையெனலாம். அந்த வெற்றிடத்தை, மாயனால் எழுதப்பட்ட ‘ நூறு மின்னல்கள்’ என்ற இந்நாவல் ஓரளவு நிரவுகிறது. கிழக்கு மாகாணத்தில் சூல்கொண்ட போர்ப்புயல் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரமே இந்நாவலாகும்.
-எழுத்தாளர், கவிஞர் தமிழ்நதி
Be the first to rate this book.