புதிய புதிய நோய்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம் முன்னோர் வாழ்க்கை முறையை நினைத்தால் பெருமைகொள்ளாமால் இருக்க முடியாது. கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் உருவாகி இன்று மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருப்பதற்கு காரணம், உலக மக்களின் வாழ்க்கைமுறை மாறிப் போனதுதான். குடிக்கும் நீருக்கு விலை வைக்கும் நிலை உருவானபோதே எல்லாம் மாறிவிட்டன. நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள், தம் வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் இயற்கையோடு அமைத்துக்கொண்டதால் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்று எல்லாவற்றிலும் கலப்படம் என்றாகிவிட்டதால் நோய்கள் பெருகி மனித ஆயுள் குறுகிவிட்டது. இந்தச் சூழலில் எந்த முறையான வாழ்க்கை முறை, உணவு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த நூல். டாக்டர் விகடன் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இது. அதிகாலை எழுதல், பல் துலக்கும் முறை, குளிக்கும் முறை, உடற்பயிற்சிக்கான நேரம், உணவு முறை, ஆடை உடுத்துதல் போன்ற நம் அன்றாட வாழ்க்கை முறைகளை எப்படி எப்படியெல்லாம் செய்தால் நோயின்றி வாழலாம் என்பதை இந்த நூல் விளக்குகிறது. முறையான வாழ்க்கை முறையால் நிறைவான வாழ்க்கை வாழ வழிகாட்டும் நூல் இது!
Be the first to rate this book.