தொழில்நுட்ப, பொறியியல் சார்ந்த அறிவியல் உலகின் அந்தஸ்துமிக்க துறைகளில் வேதியியல் துறையும் ஒன்று. பலவித சமன்பாடுகளும், பற்பல ஆய்வுக் கூறுகளும்தான் வேதியியலின் அடிப்படை சூத்திரங்களாக விளங்குகிறது என்பதை அனைவரும் அறிவர். பரவலாக இருக்கும் இந்தத் துறையின் அடிப்படையான சமன்பாடுகளையும் அவசியமான வேதியியல் செய்முறைகளையும் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கு, சமூகத்தில் நல்லதோர் அந்தஸ்தை கொடுத்துள்ளது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம் போன்ற துறைகளில் 1901 முதல் 2000 வரையிலான ஆய்வுகளையும், ஆராய்ச்சியாளர்களின் நிலைகளையும் ஏற்கெனவே நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். அதேபோன்று, வேதியியல் துறையிலும் 1901 தொடங்கி 1950 வரையிலான வேதியியல் அறிஞர்களின் ஆய்வுகளும், அறிஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.