நூல் நெடுக பெரியாரியம். அம்பேத்கரியம் மற்றும் பூலேயியம் என்று கறுப்பும் நீலமுமாகக் கருத்துக்கலவையைக் குழைத்து, பெண்ணியத் தூரிகையால் வார்த்தைகளுக்குக் காத்திரமான வர்ணம் பூசி, அவற்றுக்கு உயிரையும் உணர்வையும் ஒருசேர ஊட்டி, அட்டகாசமாக உலாவ விடுகிறார் தோழர் கீதா இளங்கோவன். பெண்ணியச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்கிற வகையில் நூலின் முற்பகுதியில் அவரின் சிந்தனைச் சிதறல்கள் ஆணாதிக்கச் சமூகத்தின் முகத்திரையைக் கிழித்துத் தொங்க விடுகின்றன. இயல்பான மொழிநடையில், யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் அனுபவங்களைத் அவருக்கே உரிய பாணியில், சில நேரங்களில் 'ஹைக்கூ', மற்ற நேரங்களில் சின்னஞ் சிறுகதை என்று சுவையாக அளிக்கும் கீதாவின் கருத்தோவியங்கள் இவை.
- ம.தமிழ் வேந்தன்,
IRS கூடுதல் ஆணையர்(ஓய்வு),
சுங்க வரித்துறை, சென்னை
Be the first to rate this book.