பெரும் முதலீடு, உலகத் தரம், நவீன தொழில்நுட்பம் என்று ஆயிரம் பாஸிடிவ் விஷயங்கள் இருந்தாலும், தகுந்த விற்பனை பிரதிநிதிகள் இல்லாவிட்டால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடைந்துவிடும். அந்த வகையில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சக்தி, சேல்ஸ்மேன். நுணுக்கமான தொழில்திறன், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் திறன், வசியப்படுத்தும் வித்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்று சேரும்போதுதான் ஒரு சேல்ஸ்மேன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்கிறார். டார்கெட்டை மனத்தில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ, சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல், ஒரு நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ்மேன் மாறவேண்டும். அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது.
Be the first to rate this book.