அரசு வன்முறையின் வலி நிறைந்த வாழ்வையும் எதிர்ப்பரசியலின் வலிமைமிக்க படிமங்களையும் ஒவ்வொரு பக்கத்திலும் உச்சபட்ச ஆற்றலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் த்ராபா.
- பப்ளிசர்ஸ் வீக்லி ரெவ்யூ
உணர்ச்சிமிகு உரையாடல் வடிவமும் சிறப்புற அமைந்துள்ள காலவெளி அரசியலின் காட்சிப் படிமங்களுமாக லத்தீன் அமெரிக்க இலக்க்யத்தின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் தொடர்ந்திருக்கிறார் மார்த்தா த்ராபா.
- சாய்ஸ் ரெவ்யூ
1976 முதல் 1983 வரை அர்கெந்தினாவில் ராணுவ சர்வாதிகார ஆட்சியில் நநடந்த கொடுமைகளும், கொலைகளும் ஹிட்லரின் கொடுமைகளுக்கு நிகரானவை. இரு பெண்களின் உணர்வு ததும்பும் உரையாடலாக வெளிப்படும் இக்காலகட்டத்தை கண்முன் விவரிக்கும் நாவலைப் படிக்கும்போது மனக்கண்ணில் எழுகின்ற லத்தீன் அமெரிக்க ஆன்மாவின் அவல உரு வசிக்காத அறையில் படியும் தூசி போல நம் இதயங்களின் மீது படிய ஆரம்பிக்கிறது.
- அ. ஜ. கான்
மார்த்தாவை எழுத்தாளர் என்று கூறுவதைவிட அவர் லத்தீன் அமெரிக்க மக்களின் மனசாட்சி என்று கூறுவது பொருத்தமானது.
- ராமு மணிவண்ணன்
Be the first to rate this book.