நிழல்களின் தேசம் நூலாசிரியர் ஜெ.பிஸ்மியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. சுமார் இருபதாண்டுகளாக திரைப்படப் பத்திரிகையாளராக இயங்கி வரும் ஜெ.பிஸ்மி, துணிவுமிக்க பத்திரிகையாளர். அவரது எழுத்தில் வேகமும், வீர்யமும் எல்லாவற்றையும் விட உண்மை இருக்கும். அதனாலேயே அவரது எழுத்துக்குத் திரையுலகில் அடிக்கடி கடும் கண்டனங்கள் எழுவதுண்டு. ஆனாலும், அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. மாறாக, தன் எழுத்துக்கான நியாயத்தை எந்தநிலையிலும் இழக்காமல் தொடர்ந்து திரைப்படங்களைப் பற்றியும், தமிழ்த்திரைப் படத்துறையைப்பற்றியும் காரசாரமான கட்டுரைகளை எழுதி வருபவர்
Be the first to rate this book.